தமாரா குணநாயகத்திற்கு ஜெனீவாவில் நடந்தது என்ன?; தயான் ஜயதிலக்க விளக்கம்

தமாரா குணநாயகத்திற்கு ஜெனீவாவில் நடந்தது என்ன?; தயான் ஜயதிலக்க விளக்கம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 9:09 pm

நாட்டின் இராஜதந்திர துறையின் பின்னடைவுகள் தொடர்பாக ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக நேற்று  நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

[quote]2012ஆம் ஆண்டில் முதல் தடவையாக நாங்கள் தோல்வியடைந்தோம். அதன் போது கொழும்பில் இருந்து சஜீன் டி வாஸ் குணவர்தன மற்றும் ஷெணுகா செனவிரத்ண உட்பட 20 அல்லது 30 பேர் அங்குச் சென்றனர். கிரிஸ் நோனிஸ் சம்பவத்தின் பின்னணியை பார்க்க வேண்டும். ஆனால் 2012 ஆம் ஆண்டில் இவர்கள் ஜெனீவாவில் செயற்பட்ட விதம் தொடர்பில் பரிஸில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பொன்றின் போது பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சின் மனித உரிமைகளுக்கான தூதுவர் சிமரே விமரச்சித்தார். இவர்கள் ஜெனீவாவில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்று எனக்குத் தெரியாது நான் இருந்தது பிரான்ஸில். அவ்வாறு செயற்பட்டு விட்டு தமாரா குணநாயகத்திற்கு இலங்கைக்காக பெயரிடப்பட்டுள்ள ஆசனத்தில் கூட இருக்க அனுமதிக்கவில்லை. அதில் சஜின் டி வாஸ் குணவர்தனவே அமர்ந்திருந்தார். யூடியூபில் பார்த்தால் இதனைக் காணடுமுடியும். அன்று தான் நாங்கள் முதல் தடவையாக தோல்வியடைந்தோம். இவ்வாறு தோல்வியடைய காரணமாக இருந்தவர்களுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அதுவரை காலமும் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமார குணநாயகத்தை விலக்கினார்கள். வெற்றி பெற்றபோது என்னை விலக்கியது போன்றே இதுவும் இடம்பெற்றது. ஆகவே டயஸ்போராவிற்கு சாதகமாக செயற்பட்டுள்ளது யார்?[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
co[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்