ஜெனீவாவில் புலிகள் அமைப்பினை சேர்ந்தவருக்கு ஒப்பந்தத்தை வழங்கியமை தேசப்பற்றா?; சஜித் கேள்வி

ஜெனீவாவில் புலிகள் அமைப்பினை சேர்ந்தவருக்கு ஒப்பந்தத்தை வழங்கியமை தேசப்பற்றா?; சஜித் கேள்வி

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 9:23 pm

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை புலிகள் அமைப்பின் ஒருவருக்கு வழங்கியமை தேசப்பற்றா? தேசத்துரோகமா? என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இன்று முற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்