ஜப்பானின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் இராஜினாமா

ஜப்பானின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் இராஜினாமா

ஜப்பானின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 2:17 pm

ஜப்பானின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் யூகூ ஒபூஞ்சி பதவி விலகியுள்ளார்.

அரச  நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து தனது இராஜினாமா கடிதத்தை பிரதமர் ஷின்சோ அபேயிடம் அவர் கையளித்துள்ளார்.

பிரபலமன்ற பொருளாதார கொள்கைகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ள பிரதமர் ஷின்சோ அபேக்கு ஒரு பின்னடைவாக இது கருதப்படுகின்றது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது நியமிக்கப்பட்ட ஐந்து பெண் அமைச்சர்களில் ஒருவரான இவர்  ஜப்பானின் முதலாவது பெண் பிரதமராக வரக் கூடிய முக்கியமான ஒருவராக நோக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்