சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் மீண்டும் சத்தியாகிரகப் போராட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் மீண்டும் சத்தியாகிரகப் போராட்டம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் மீண்டும் சத்தியாகிரகப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 8:56 am

முகாம்களை அகற்றிய போதிலும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

பலாங்கொடை – கொழும்பு பிரதான வீதியின் பம்பஹின்ன முச்சந்தியில்  பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் பிரதேச மக்களும் இணைந்துக் கொண்டனர்.

பம்பஹின்ன முச்சந்திக்கு நேற்று இரவு வந்த பெருந்திரளான மாணவர்கள் அங்கு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சத்தியாகிரகத்திற்காக அமைக்கப்பட்ட முகாம்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடந்த வாரம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்