சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஐவர் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஐவர் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஐவர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 7:00 pm

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சரணடைந்த ஐவர் எதிர்வரும் 28ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் பலாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸில் சரணடைந்தவர்களில் இபுல்பே பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்