கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்; வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு (Photos)

கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்; வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு (Photos)

கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்; வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு (Photos)

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 4:45 pm

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வை அரசாங்கம் வழங்க வேண்டுமெனத் தெரிவித்து, தொழிற்சங்கங்கள் கொழும்பில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தின.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால், சிறிதுநேரம் வாகன போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அனைத்து ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள உயர்வு வழங்குதல், சட்டங்களை வகுத்து தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரித்தல், அரச – தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாக அமைந்திருந்தன.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் லால் காந்த, அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட பல முக்கிய தொழிற்சங்க தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

IMG-20141020-WA0025 IMG-20141020-WA0024 IMG-20141020-WA0023


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்