கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 11:32 am

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை சட்டத்திற்கு முரணான வகையில் இடமாற்றம் செய்தமைக்கு, எதிர்ப்பு தெரிவித்தே பணியிலிருந்து விலகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தலைவர் எஸ். கிருஸ்ணப்பிள்ளை தெரிவிக்கின்றார்.

இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வு வழங்கப்படும் வரை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து  பொது சுகாதார பரிசோதகர்களும் பணியிலிருந்து விலகியிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும் எவ்விதமான காத்திரமான பதில்களையும் அவர்கள் வழங்கவில்லை எனவும்  எஸ். கிருஸ்ணப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வித விசாரணைகளும் இன்றி குறித்த உத்தியோகஸ்தருக்கு இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளதை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்