கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக அமைதியின்மை

கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக அமைதியின்மை

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 1:23 pm

கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக மீனவர்கள் சிலர் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு மற்றுமொரு குழு வந்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதன்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் நால்வர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவிடம் வினவியபோது, மீனவர்கள் அமைச்சுடன் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாலும், அமைச்சு என்ற வகையில் இலங்கை மீனவர்களுக்கு உரிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்