எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் – கெஹெலிய

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் – கெஹெலிய

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 5:16 pm

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

குண்டசாலை பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றை நேற்று திறந்துவைத்தபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

[quote]எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.சரியான திகதி எனக்கு தெரியும், ஆனால் உறுதிப்படுத்தப்படாமையினால் தற்போது கூற இயலாது. ஆனால் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். ஆகவே இன, மத, கட்சி பேதங்களை மறந்து நாட்டை மீட்டெடுத்த நாட்டின் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குவது புண்ணிய விடயமாகவே நாங்கள் காணுகின்றோம்.[/quote]

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக இருப்பதை இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்