இரவு பகலாக கூத்தடிக்கும் நபர்களை அனுப்பி சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடியாது – பாட்டளி சம்பிக்க ரணவக்க

இரவு பகலாக கூத்தடிக்கும் நபர்களை அனுப்பி சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடியாது – பாட்டளி சம்பிக்க ரணவக்க

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 8:40 pm

நாட்டின் இராஜதந்திர சே​வையில் காணப்படும் குறைப்பாடுகளே தற்போதைய நிலைமைக்கு காரணம் என அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க
[quote]இந்த சர்வதேச போராட்டத்தை நாம் முன்னெடுக்கவில்லை. அது தொடர்பாக வாத பிரதிவாதங்களும் இருக்கவில்லை. எமக்கு உபாய மார்க்கங்களும் இருக்கவில்லை. அதே போன்று திட்ட வரைபும் காணப்படவில்லை. எமக்கு மனித வளம் இருக்கவும் இல்லை. பயங்கரவாத சக்திகள் வெறுமனே இருக்கவில்லை. அவர்கள் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்பிலேயே உள்ளனர். குறிப்பாக மேற்குலக சக்திகளின் பின்னணியிலேயே உள்ளனர். ஆகவே இதனை கருத்தில் கொண்டு போராடக் கூடிய, முறையான வெளிவிவகார கொள்கை, உபாய மார்க்கங்கள், செயற்றிட்டங்கள் மற்றும் உரிய அதிகாரிகளை சர்வதேச முனைக்கு நாம் அனுப்பவும் இல்லை. இரவு பகலாக கூத்தடிக்கும் நபர்களையே இன்று அங்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு சர்வதேசத்தை எம்மால் வெற்றிக் கொள்ள முடியுமா? முடியாது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்