அம்பாறையில் தூண்டிலில் சிக்கிய புலிச்சுறாக்கள் (WATCH VIDEO)

அம்பாறையில் தூண்டிலில் சிக்கிய புலிச்சுறாக்கள் (WATCH VIDEO)

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2014 | 12:01 pm

அரிதாகக் கிடைக்கும் புலிச்சுறா எனும் மீனினத்தைச் சேர்ந்த மூன்று மீன்கள் அம்பாறை மாவட்டம் ஒலுவில் மீன்பிடி துறைத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் சிக்கின.

ஒவ்வொன்றும் சுமார் 500 கிலோகிராம் எடைகொன்ட மூன்று புலிச் சுறாக்களையும் இன்று காலை மீனவர்கள் தமது படகிலிருந்து ஒலுவில் மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வந்தனர்.

FISH

ஆயினும், இந்த வகை மீன்களுக்கு சந்தையில் விலை குறைவு என தெரிவிக்கப்படுகிறது.

500 கிலோகிராம் எடைகொண்ட மேற்படி புலிச்சுறா மீனொன்றினை 5 ஆயிரம் ரூபாவுக்கே விற்பனை செய்ய முடியுமென அங்கிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

FISH02 jpg

கடலிலுள்ள சில வகைச் சுறா இன மீன்களைப் பிடிப்பதை அரசாங்கம் தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்