10 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த சிறிய கல்; முல்லைத்தீவில் நடந்தேறிய சோகம் (Video & Photos)

10 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த சிறிய கல்; முல்லைத்தீவில் நடந்தேறிய சோகம் (Video & Photos)

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 8:22 pm

முல்லைத்தீவு மல்லாவி 4 ஆம் யூனிற் பகுதியில் 10 மாதங்கள் நிரம்பிய குழந்தை  தொண்டையில் சிறிய கல் ஒன்று சிக்கியதால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லிகிதன் தனுசிகா என்ற 10 மாதக் குழந்தை சிறுவர்களுடன் அவரது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறிய கல் ஒன்றை விழுங்கியுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது குழந்தையின் தாயார் மாடு கட்டுவதற்காக அயல் காணிக்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் கூக்குரலை கேட்டு வந்த தாயார் தனுசிகாவை மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியாமற்போயுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் இன்று வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே தனுசிகாவின் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

சுவாசக்குழாயில் கல் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

baby stone


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்