மேடையை அகற்றினாலும் போராட்டம் தொடரும்; சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள்

மேடையை அகற்றினாலும் போராட்டம் தொடரும்; சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள்

மேடையை அகற்றினாலும் போராட்டம் தொடரும்; சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 7:53 pm

சப்ரகமுவ பல்லைக்கழக மாணவர்கள் சிலர் பலாங்கொடை பம்பஹின்ன சந்தியில் இன்று பிற்பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு இதன்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு தமது கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பலாங்கொடை பம்பஹின்ன சந்தியில் மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொண்டுவந்த மேடையை பொலிஸார் நேற்று அகற்றியிருந்தனர்.

எவ்வாறாயினும் தமது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும் என  சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்