போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் இருவர் சென்னையில் கைது

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் இருவர் சென்னையில் கைது

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் இருவர் சென்னையில் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 11:05 am

சர்வதேச ரீதியில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்களும் இந்திய பிரஜை ஒருவரும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் சென்னை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 17 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை பூந்தமல்லி பகுதியிலுள் வீடொன்றில் வைத்து  சந்தேகநபர்களால் போதை பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுடெல்லி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புதுடெல்லி போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்