நாட்டின் நீர்மின் உற்பத்தி 61 சதவீதத்தால் உயர்வு

நாட்டின் நீர்மின் உற்பத்தி 61 சதவீதத்தால் உயர்வு

நாட்டின் நீர்மின் உற்பத்தி 61 சதவீதத்தால் உயர்வு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 2:01 pm

நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 61 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் உற்பத்தியில் 40 வீதம் நீர் மின் உற்பத்தி என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொது முகாமையாளர்  செனஜின் தசாநாயக்கா குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் மழையுடன் கூடிய  வானிலைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்