தெற்கு அதிவேக வீதியில் 43 சொகுசு பஸ் சேவைகளுக்கு அனுமதி

தெற்கு அதிவேக வீதியில் 43 சொகுசு பஸ் சேவைகளுக்கு அனுமதி

தெற்கு அதிவேக வீதியில் 43 சொகுசு பஸ் சேவைகளுக்கு அனுமதி

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 7:43 pm

தெற்கு அதிவேக வீதியில் அரை சொகுசு பஸ் சேவைகளை நடத்துவதற்காக  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 43 வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை விநியோகித்துள்ளது.

மஹரகமயில் இருந்து மாத்தறைக்கான பஸ் சேவைகளை நடத்துவதற்காக 28 அனுமதிப் பத்திரங்களும், மாத்தறையிலிருந்து கடுவலைக்கு பஸ் சேவைகளை நடத்துவதற்காக 15 அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த 43 வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்