ஜெயலலிதாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தீபாவளி வாழ்த்து

ஜெயலலிதாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தீபாவளி வாழ்த்து

ஜெயலலிதாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தீபாவளி வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 5:46 pm

சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று அந்தக் கடிதத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து நேற்றைய தினம் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்