கொழும்பு – கதிர்காம பஸ்ஸில்  போலி நாணயத்தாள்கள்  கண்டுபிடிப்பு

கொழும்பு – கதிர்காம பஸ்ஸில் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிப்பு

கொழும்பு – கதிர்காம பஸ்ஸில் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 2:33 pm

கொழும்பு கதிர்காம வீதியில் பயணித்த பஸ் ஒன்றிலிருந்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

போலி நாணயத்தாள்கள் அடங்கிய பொதி ஒன்று இன்று அதிகாலை நபரொருவரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அந்த பொதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 140 காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பொதியை பொலிஸாரிடம் ஒப்படைத்த நபர் தொடர்பிலும் போலி நாணய பரிமாற்றத்துடன் தொடர்புடைய நபர் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்