கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெற்று பொருட்களை கொள்ளையிட்ட பெண் கைது

கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெற்று பொருட்களை கொள்ளையிட்ட பெண் கைது

கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெற்று பொருட்களை கொள்ளையிட்ட பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 7:39 pm

கொழும்பில் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வீடுகளை வாடகைக்குப் பெற்று அதிலுள்ள பொருட்களை கொள்ளையிட்ட பெண் ஒருவரை மிரிஹான விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான பெண் அத்துருகிரிய பகுதியில் 11 வீடுகளையும், மஹரகம பகுதியில் இரண்டு வீடுகளையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் குறித்த வீடுகளில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண் தெஹிவளை பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்று இரண்டு மாதங்கள் நிரம்பிய குழந்தையொன்றை அங்கு கைவிட்டு சென்றிருந்தார்.

இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காலி பகுதியில் தலைமறைவாகிருந்த 30 வயதான பெண்ணை கைது செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்