கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 7:56 am

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பரந்தன் பகுதியில் ஏ -9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று இரவு 9.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்