‘கத்தி’ தீபாவளியன்று வெளியாகுமா?; முடிவு இன்று மாலை

‘கத்தி’ தீபாவளியன்று வெளியாகுமா?; முடிவு இன்று மாலை

‘கத்தி’ தீபாவளியன்று வெளியாகுமா?; முடிவு இன்று மாலை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 3:38 pm

விஜய் நடிப்பில் ‘கத்தி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் எவ்வித பிரச்சனையும் இன்றி வெளியாகும் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மாத்திரம் கத்தி படத்தை வெளியிடுவதில் சிக்கல்தோன்றியுள்ளது.

தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்களின் கடைசி நேர அறிக்கையால் திரையரங்கு உரிமையாளர்கள் கத்தியை வெளியிட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

‘கத்தி’ திரைப்படத்தின் பிரச்சினைகள் குறித்து நேற்று செய்யப்பட்டிருந்த சிறப்பு கூட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டம் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கத்தி படம் வெளியீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இருப்பினும் கத்தி படத்தை தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெளியிட எவ்வித பிரச்சனையும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து கத்தி திரைப்படம் தீபாவளி தினத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்