எஹெலியகொடயில் பஸ் ஓடைக்குள் குடைசாய்ந்ததில் 23 பேர் காயம்

எஹெலியகொடயில் பஸ் ஓடைக்குள் குடைசாய்ந்ததில் 23 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 11:52 am

எஹெலியகொடயில் பஸ் ஒன்று ஓடைக்குள் குடைசாய்ந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் எஹெலியகொட மற்றும் கிரிபொருவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ் இன்று முற்பகல் ஓடைக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறுக்கு வீதி ஒன்றினூடாக பயணித்த பஸ், பாதுகாப்பற்ற பாலம் ஒன்றினூடாக பிரவேசிக்க முற்பட்டவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்