அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமை ஜனாதிபதியின் சகோதரர் என்பதால் அல்ல – கோட்டாபய ராஜபக்ஸ (Exclusive)

அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமை ஜனாதிபதியின் சகோதரர் என்பதால் அல்ல – கோட்டாபய ராஜபக்ஸ (Exclusive)

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2014 | 8:53 pm

அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தமைக்கு ஜனாதிபதியின் சகோதரர் என்பது காரணமாகவில்லை எனவும் அந்த பணிகளை தனது பணியாக நினைத்து செயற்படுத்தியமையே இதற்குக் காரணம் எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

நியூஸ்பெஸ்ட்டுடனான விஷேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

கேள்வி
உங்களது கண்காணிப்பின் கீழ் பெறும் தொகையானோர் சேவையாற்றுகின்றனர். பல நிறுவனங்களும் உள்ளன. அவர்களுக்கு எவ்வகையான ஆலோசனையை வழங்குவீர்கள்?

பதில்
[quote]மக்களின் வாழ்விற்கு தகுதியான இடங்களாக உருவாக்குவதற்காகவே நகர அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இந்த நோக்கத்தை கருத்தில் கொள்ளாது செயற்பட்டால் இறுதியில் மக்களால் வாழ தகுதியற்றவையாகவே அந்த நகரங்கள் காணப்படும். இதனை தான் நாங்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளோம். உலகத்தில் காணப்படுகின்ற மிக உயர்ந்த முறைகளை பயன்படுத்தியே கொழும்பு நகரை அபிவிருத்தி செய்து வருகின்றோம். மக்கள் நேசிக்கும் நகரமாக அமைவதற்காகவே கொழும்பில் இவ்வாறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பயணத்தில் குறிப்பிட்ட இலக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த இலக்குகளுக்கு 2020 ஆம் ஆண்டில் தீர்வு காண முடியும் என நாங்கள் உத்தேசித்துள்ளோம்.[/quote]

கேள்வி
மக்களின் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்
[quote]மக்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. சிறிய அபிவிருத்திப் பணிகளைக் கூட உதாரணமாக ஒரு மரக்கன்றை வைத்தாலும் அதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்ளுகின்றோம். அவற்றை பாதுகாக்க மக்கள் செயற்பட வேண்டும். அதேபோன்று சுத்தம் தொடர்பாக கவனத்தில் கொண்டு குப்பைகள் போடாது செயற்பட வேண்டியது முக்கியமாகும்.[/quote]

கேள்வி
புதிய விடயங்களை ஆரம்பிக்கும் போது விமர்சனங்கள் மற்றும் தடைகள் ஏற்படும். இதில் உங்களுக்கு அனுபவம் இருக்கும். இவ்வாறான சவால்களை எவ்வாறு நீங்கள் வெற்றிக் கொண்டீர்கள்? இது அரசியல் பிரச்சனையாக கூட இருக்கலாம்.

பதில்
[quote]நான் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கையில் இறுதியாக அதனை யதார்த்தமானதாக உருவாக்கியதனால் மக்கள் என் மீது நம்பிக்கை வைக்கின்றனர். ஆகவே அவ்வாறான எதிர்ப்புகள் தற்போது குறைவடைந்துள்ளன.[/quote]

கேள்வி
நீங்கள் அமைச்சரல்ல, ஜனாதிபதியின் சகோதரர் என்றாலும் அமைச்சின் செயலாளராகவே செயற்படுகின்றீர்கள். ஆகவே ஏனைய அரச அதிகாரிகளுக்கு இந்த பணிகள் குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்
[quote]அரச அதிகாரி என்ற வகையில் எனக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் என்பதற்காக அவற்றை எல்லாம் செய்ய முடியும் என சிலர் கூறலாம். ஆனால் அது தவறாகும். மாறாக விருப்பமிருந்தால் யாராலும் இவற்றை செய்ய முடியும். நான் அனைத்து விடயங்களையும் எனது விடயமாக கருதியே செய்கின்றேன். ஆகவே அரச உத்தியோகஸ்தர்கள் பணிகளை தமது விடயமாக கொண்டு செயற்பட்டால் மக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழ்ஙக முடியும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்