ஹொங்கொங்கில் புரட்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

ஹொங்கொங்கில் புரட்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

ஹொங்கொங்கில் புரட்சியாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரம்

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 1:44 pm

ஹொங்கொங் குடைப்புரட்சியாளர்கள் மொங் கொக் நகரின் வீதிகளை பொலிஸாரிடமிருந்து  மீளக் கைப்பற்றியுள்ளனர்

மொங் கொங் வீதிகளை குடைப்புரட்சியாளரகள் கைப்பற்றியதன் பின்னர் பொலிஸார் அவர்கள் மீது தடியடிப்பிரயோகம் மற்றும் மிளகாய்ப் பொடிகளை தூவியுள்ளனர்.

பொலிஸாரின் தாக்குதல்களிலிருந்து தமது குடைகளின் மூலமே குடைப்புரட்சியாளர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவிக்கன்றனர்.

இதன் காரணமாக மொங் கொக் நகர வீதிகளை மூடியுள்ளதால் ஹொங்கொங்கின் பல பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கன்றன.

எதிர்வரும்  2017 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலில் சீனாவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர்களுக்கே போட்டியிட முடியும் என தெரவிக்கப்பட்டமைக்கே எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்