வாடகை வாகனங்களை அடகுவைத்த அறுவர் கைது

வாடகை வாகனங்களை அடகுவைத்த அறுவர் கைது

வாடகை வாகனங்களை அடகுவைத்த அறுவர் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 6:34 pm

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அவற்றை அடகுவைக்கும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

வாடகைக்கு வாகனங்களை வழங்குவதாக பத்திரிகைகளில் வெளியாகும் விளம்பரகளில் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இவர்கள் வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களால் அடகு வைக்கப்பட்ட இரண்டு கார்கள், சிறிய லொறு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் சிலருக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்