யாழில் ஆசிரியர்கள், மாணவர்களை ஏற்றிவந்த பஸ் மீது கல்வீச்சு

யாழில் ஆசிரியர்கள், மாணவர்களை ஏற்றிவந்த பஸ் மீது கல்வீச்சு

யாழில் ஆசிரியர்கள், மாணவர்களை ஏற்றிவந்த பஸ் மீது கல்வீச்சு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 12:55 pm

யாழ். பருத்தித்துறையில் இருந்து பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிவந்த பஸ் ஒன்றின் மீது விசுவமடு பகுதியில் அடையாளம் தெரியாத சிலரால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி அணிந்திருந்த நால்வர் நேற்று பிற்பகல் பஸ் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்றின்மீதே கல்வீ்ச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் பஸ்ஸில் இருந்தவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை

தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்