முந்தல் பகுதியில் விபத்து; வைத்தியர் உட்பட இருவர் பலி

முந்தல் பகுதியில் விபத்து; வைத்தியர் உட்பட இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 10:40 am

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் முந்தல் பகுதியில் இன்று அதிகாலை அம்பியூலன்ஸ் வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் பெண் வைத்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து சிலாபம் வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை அனுமதிப்பதற்காக  அழைத்துச்சென்ற அம்பியூலன்ஸ், அங்கிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

திரும்பி வந்துகொண்டிருந்த அம்பியூலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

விபத்தில் அம்பியூலன்ஸ் வாகனத்திலிருந்த புத்தளம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரும், வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்