மக்களின் விருப்பத்திற்கு அமையவே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்-  சிவாஜிலிங்கம்

மக்களின் விருப்பத்திற்கு அமையவே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்

மக்களின் விருப்பத்திற்கு அமையவே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 9:18 am

மக்களின் விருப்பத்திற்கு அமையவே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

“தண்டவாளத்திலே படுத்து எம்மை போராட்டம் நடத்த எம்மை நிர்பந்திக்காதிர்கள். நீஙக்ள ரயில் கங்கேசன் துறைக்கு செல்லுமாக இருந்தால் காங்கேசன் துறைக்கு எமது மக்கள் செல்ல முடியாது புகையிரதம் அங்கிருந்து புறப்படுமாக இருந்தால் முழுக்கமுழுக்க படைவீரர்களை நகர்த்து கொண்டு வருவார்கள்.எங்களுடைய மக்கள் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டு வரும்.அதாது முன்பதிவு செய்தவர்கள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் நின்றுகொண்டு பயணம் செய்ய வேண்டும்.ஆகவே எங்ளுடைய பொது மக்கள் எங்கு எங்கு போக விரும்புகின்றார்களோ அங்குதான் புகையிரதம் ஆரமப்பிக்க வேண்டும் சுன்னாகம் வரை மக்கள் போகின்றார்கள் என்றால் அங்கிருந்தே ரயில் புறப்படவேண்டும்.அல்லது தெல்லிப்பளையில் இருந்து போவதாக இருந்தால்அங்கிருந்துதான் புறப்பட வேண்டும்.காங்கேசன்துறையில் இருந்து புறப்பட அனுமதிக்க மாட்டோம்.வந்தல் ரயிலை நாம் மறிப்போம்இதனை இந்திய அரசிக்கும் இலங்கை அரசுக்கும் சொல்ல விரும்புகின்றோம்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்