நாட்டில் பல பகுதிகளில் சீரற்ற வானிலை;150 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன

நாட்டில் பல பகுதிகளில் சீரற்ற வானிலை;150 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன

நாட்டில் பல பகுதிகளில் சீரற்ற வானிலை;150 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 6:13 pm

அதிக மழைக் காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் 150 க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

குறித்த பகுதிகளில் நான்கு அடிய உயரத்திற்கு நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்