சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் சத்தியாக்கிரக மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் சத்தியாக்கிரக மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 6:06 pm

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பலாங்கொடை பம்பஹின்ன சந்தியில் சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொண்டுவந்த மேடையை பொலிஸார் இன்று அகற்றியுள்ளனர்.

பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய குறித்த மேடை அகற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சத்தியாக்கிரக மேடையை அகற்றினாலும் தமது கோரிக்கைகளை வெற்றிகொள்ளும் வரை போராட்டங்களை கைவிடப்போவதில்லை என சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குதல், தடை செய்யப்பட்ட மாணவர் சங்கங்களை மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்தப் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 47 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்