காணாமற்போனோர் ஆணைக்குழுவுடன் நிபுணர் குழு உரையாடல்

காணாமற்போனோர் ஆணைக்குழுவுடன் நிபுணர் குழு உரையாடல்

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 1:25 pm

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, அதற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழுவினருடன் கலந்துரையாடியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம உள்ளிட்ட குழுவினர், நிபுணத்துவ குழுவின் தலைவர் சேர். டெஸ்மன்ட் டி சில்வா, அவ்தாஷ் கௌஷால் மற்றும் அஹ்மட் பிலால் ஆகியோருடன் முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து இலங்கையில் மோதல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் சாட்சி விசாரணைகளை மேலும் விரிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதற்காக சர்வதேச ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்