ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்- நிபுணர்கள்

ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்- நிபுணர்கள்

ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்- நிபுணர்கள்

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 2:02 pm

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குவதற்கு ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த தீர்ப்பின் மூலம் ஐரோப்பா முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக சிங்கப்பூரிலுள்ள நந்யன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரசியல் துன்புறுத்தல்கள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சி சர்வதேச நிலையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குவதற்கு லக்ஸம்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது.

இந்த தீர்ப்பின் மூலம், ஐரோப்பாவில் வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமா என்பது குறித்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இதுதவிர, அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்