இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷில் கைது

இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷில் கைது

இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷில் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 1:17 pm

பங்களாதேஷ் கடற் பரப்பிற்குள் பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்டிருந்த சுழிக்காற்று அபாயம் காரணமாக மியன்மார் கடற் பரப்பிற்குள் நுழைந்த மீனவர்கள் சிலரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களின் நான்கு படகுகளும் பங்களாதேஷ் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.

கைதான இலங்கை மீனவர்கள் தொடர்பில் பங்களாதேஷ் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்