அழுத்தங்களை குறைக்கும் வகையில் அமெரிக்காவுடன் செயற்பட்டுவருவதாக பிரசாத் காரியவசம் தெரிவிப்பு

அழுத்தங்களை குறைக்கும் வகையில் அமெரிக்காவுடன் செயற்பட்டுவருவதாக பிரசாத் காரியவசம் தெரிவிப்பு

அழுத்தங்களை குறைக்கும் வகையில் அமெரிக்காவுடன் செயற்பட்டுவருவதாக பிரசாத் காரியவசம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2014 | 12:04 pm

இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் செயற்பாடு குறித்த  அழுத்தங்களை குறைக்கும் வகையில் அமெரிக்காவுடன் பரந்தளவிலான செயற்பாட்டினை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நியுஸ்பெஸ்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நியூஸ் பெர்ஸ்ட் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பிரசாத் காரியவசம் வழங்கிய பதில்களின் தமிழாக்கத்தை தற்போது நீங்கள் கேட்கலாம்.

கேள்வி – அமெரிக்காவின் கொள்கையில் இலங்கைக்கு சாதகமான நிலையை உருவாக்க எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

“அமரிக்காவுக்கு சென்று மூன்று மாதங்களே ஆகின்றன.அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 40 பேரை சந்தித்துள்ளேன்.அவர்களுக்கு நாட்டின் உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளளேன்.காங்கிரஸ் உறுப்பினர்கள் ,இராஜாங்க திணைக்களம் மற்றும் வௌ்றை மாளிகை ஆகியவற்றுக்கிடையில் அமெரிக்க கொள்கைக்கு தாக்கம் ஏற்படுகின்றது.அந்த மூன்று தரப்புகளுடன் கலந்துரையாடுவதே எனது முயற்சியாக அமைகின்றது.
அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்த முயற்சிக்கின்றேன்”

கேள்வி –  மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கும் அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.ஆகவே இதற்கான காரணம் என்ன?

“அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அரசாங்கத்திற்கு எதிரான தமிழ் அடிபடைவாதிகளே முன்னெடுத்தனர்.இதனாலேயே அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மனித உரிமைகள் பேரவை அதற்கு காரணமாக அமைந்தது.ஆனால் அது ஒரு பாரிய விடயமாக மாற்றவடைவதனை தடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.”

கேள்வி – மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு  எதிர்வரும் மாரச் மாதம் திர்கமானதாகவே அமையும்?
தூதுவர் என்ற வகையில் நீங்கள் அடையாலம் கண்டுள்ளீர்களா?

“தீர்க்கமானது என்ற விடயம் எனக்கு தெளிவில்லை,தீர்க்கமானது என்று எதனை குறிபிடுகின்றீர்கள்?மார்ச் மாதத்தில் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை கொண்டு வருவார்கள் அதனை நாங்கள் ஏற்க போவதில்லை.அதனை தவறான நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம்.எவ்வாறாயினும் எமது நிலைபாட்டுடன் ஒத்துழைக்கும் பல நாடுகள் உள்ளன.அதனால் அதனை தீர்கமானது என நாம் கருதுவதில்லை.ஆனால் அதனூடாக ஏற்படவூடிய பின்விளைவுகளையும் நாம் எற்க தயாராகவுள்ளோம்.”

கேள்வி – எவ்வாறாயினும் அமெரிக்காவை வெற்றி கொள்ள உங்களிடன் திட்டம் ஏதேனும் உள்ளதா?

“விசேடமாக காங்கிரஸ் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மனித உரிமைகள் பேரவையில் ஏற்படகூடிய அழுத்தங்களை குறைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்