ஸ்டீபன் ஸ்மித்தின் பிடியெடுப்பு சரியானதே; ஐ.சி.சி விளக்கம் (Video)

ஸ்டீபன் ஸ்மித்தின் பிடியெடுப்பு சரியானதே; ஐ.சி.சி விளக்கம் (Video)

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 4:05 pm

அண்மையில் கிரிகெட் உலகை கலக்கிய ஸ்டீபன் ஸ்மித்தின் சர்ச்சைக்குரிய பிடியெடுப்பானது விதிமுறைகளுக்கு அமைவானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.  மெல்பர்ன் கிரிக்கெட்  கழகத்துடன் (எம்.சி.சி) இணைந்து இந்த அறிவுறுத்தலை ஐ.சி.சி நடுவர்களுக்கு அறிவித்துள்ளது.

விதிமுறை 41.8 இற்கு அமைவாகவே இந்த ஆட்டமிழப்பானது சரியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் ஃபவட் அலாம் ஆட்டமிழப்பு செய்யபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

பந்தானது தன்னை நோக்கி வர முன்னராக துடுப்பெடுத்தாடுபவர் ஏதேனும் அசைவுகளை மேற்கொள்வாரெனில் களத்தடுப்பாளர்களால் மைதானத்தின் எந்த பகுதியிலும் அசைந்து துடுப்பில் படும் பந்தை பிடிக்கவோ தடுக்கவோ முடியும், என்பதே இந்த விதியாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்