வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80,000 மேன்முறையீடுகள்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80,000 மேன்முறையீடுகள்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை இணைக்க 80,000 மேன்முறையீடுகள்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 9:57 am

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படாத சுமார் 80,000 பேரிடம் இருந்து மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

தற்போது மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறுகின்றார்.

இந்த விசாரணைகளில் பங்கேற்காதவர்களின் மேன்முறையீடுகள் தொடர்பில் கருத்திற்கொள்ளப்போவதில்லை எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டுகின்றது.

எவருக்கேனும் விசாரணைகளில் பங்கேற்க முடியாத பட்சத்தில், முன் அறிவிப்பின் ஊடாக திகதியை மாற்றிக்கொள்ள அல்லது கடிதம் மூலம் அதிகாரத்தை வழங்கி ஒருவரை விசாரணைகளில் கலந்துகொள்ளச் செய்ய முடியும் என பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வசிப்பிடத்தை உறுதி செய்வதற்காக, பதிவு செய்யப்பட்ட கடிதம் மூலம்   அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 31 ஆம் திகதி உறுதி செய்யப்படவுள்ளதுடன், அதனை கிராம உத்திகேத்தர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், உள்ளூராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்