வவுனியா கைத்தொழில் பேட்டையிலும் பலாங்கொடை தேயிலை தொழிற்சாலையிலும் தீ விபத்து

வவுனியா கைத்தொழில் பேட்டையிலும் பலாங்கொடை தேயிலை தொழிற்சாலையிலும் தீ விபத்து

வவுனியா கைத்தொழில் பேட்டையிலும் பலாங்கொடை தேயிலை தொழிற்சாலையிலும் தீ விபத்து

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 9:35 am

வவுனியா ஸ்ரீநகர் கைத்தொழில் பேட்டையிலுள்ள உருக்குவேலை கடையொன்றில் நேற்று பிற்பகல் தீபரவியுள்ளது.

தீயினால் கடையிலிருந்து பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றார்.

கடை ஊழியர்கள் மதிப போசனத்திற்காக வெளியில் சென்றிருந்தபோதே தீ பரவியுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயினால் சேதமடைந்துள்ளன.

மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீ பற்றியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பலாங்கொடை வெலேகொட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை பரவிய தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயினால் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ள போலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்