‘முழு உலகையும் வெற்றிகொள்ளவும்’; ஜனாதிபதி வட பகுதி மாணவர்களிடம் வேண்டுகோள்

‘முழு உலகையும் வெற்றிகொள்ளவும்’; ஜனாதிபதி வட பகுதி மாணவர்களிடம் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 10:40 am

நகரில் வசதியுள்ளவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கல்வியை கிராமத்திலுள்ள பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

வடக்கில் 3 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய தொழில்நுட்ப கூடங்களை மாணவர்களிடம் கையளித்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

வடக்கிலுள்ள பிள்ளைகளுக்கு கல்வி வசதிகள் மற்றும் சலுகைகளை எவ்வித குறைகளும் இன்றி பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வட பகுதியில் 96 மஹிந்தோதய தொழில்நுட்ப கூடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மஹிந்தோதய தொழில்நுட்ப கூடங்களை பயன்படுத்தி நாட்டை மாத்திரம் இன்றி முழு உலகையும் வெற்றிகொள்ளுமாறு ஜனாதிபதி வட பகுதி மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்