மாங்காய் பறிக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மாங்காய் பறிக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மாங்காய் பறிக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 1:49 pm

அம்பாறை கல்முனையில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கல்முனை கோயில் வீதியில் இன்று காலை 10.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 51 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மாங்காய் பறிப்பதற்கு பயன்படுத்திய இரும்பு கம்பி அதிவலுகொண்ட மின்சார கம்பியில் உரசியதால் இந்த உயிரிழப்பு சம்பவித்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்