புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீளப் பெற்றுக்கொள்ள அழைப்பு

புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீளப் பெற்றுக்கொள்ள அழைப்பு

புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீளப் பெற்றுக்கொள்ள அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 6:30 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருந்தவர்கள் அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை கோர முடியும் என இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் இன்னும் தமது நகைகளுக்கான உரிமையை கோராமலிக்கும் பொதுமக்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய பிரதேசங்களில் உள்ள சிவில் ஒருங்கிணைப்பு அலுவலகங்களை நாடி தமது உரிமைகளைக் கோர முடியும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

தமது நகைகளுக்கான உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கான பற்றுச்சீட்டுகள் மற்றும் வேறு ஆவணங்களை மக்கள் சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமது தங்க நகைகளுக்கான சட்டபூர்வ உரிமை கோரியுள்ள இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

உரிமை கோரப்படாதுள்ள ஒரு தொகை தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதுடன், அவற்றிற்கான தகுந்த ஆதாரங்களுடன் உரிமை கோருவதற்கும் பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், முறையாக பட்டியலிடப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்