பிரித்தானியா பிரதி உயர்ஸ்தானிகர் யாழுக்கு விஜயம் (Photos)

பிரித்தானியா பிரதி உயர்ஸ்தானிகர் யாழுக்கு விஜயம் (Photos)

பிரித்தானியா பிரதி உயர்ஸ்தானிகர் யாழுக்கு விஜயம் (Photos)

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 6:21 pm

இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டனர்.

மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்திற்கு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையத்தில் தங்கியுள்ளவர்களுடன் அவர்கள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு அரசாங்கத்தை கோர வேண்டும் என வலியுறுத்திய மக்கள், தமக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டமை தொடர்பிலும் பிரித்தானிய தூதுக்குழுவினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோருடன் பிரித்தானிய தூதுக் குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

பிரித்தானிய பிரதி உயஸ்தானிகராக பதவியேற்ற பின்னர் லோரா டேவிஸ் முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகை ஆகியோரையும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

british deputy HC 4 british deputy HC 1 british deputy HC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்