தெல்தெனியவில் பஸ் விபத்து; ஒருவர் பலி, 50 பேர் காயம் (Video)

தெல்தெனியவில் பஸ் விபத்து; ஒருவர் பலி, 50 பேர் காயம் (Video)

தெல்தெனியவில் பஸ் விபத்து; ஒருவர் பலி, 50 பேர் காயம் (Video)

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 4:55 pm

தெல்தெனிய, ரம்புக்வெல்ல பகுதியில் பஸ்சொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 200 மீற்றர் பள்ளத்தில் பஸ் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகந்த பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.


Visual by : – News1st u-reporter – M.Imthiyas- Digana


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்