ஜெயலலிதா பிணை மனு வழக்கில் ஆஜராகும் பாலி சேம் நரிமன்

ஜெயலலிதா பிணை மனு வழக்கில் ஆஜராகும் பாலி சேம் நரிமன்

ஜெயலலிதா பிணை மனு வழக்கில் ஆஜராகும் பாலி சேம் நரிமன்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 6:47 pm

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு தொடர்பான வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி பாலி சேம் நாரிமன் (Fali Sam Nariman) ஆஜராகவுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் எச்.எல்.தத்துவும், நாரிமனும் நெருங்கிய நண்பர்கள் எனவும், வழக்குகள் தொடர்பான சந்தேகங்களை தத்து, நாரிமனிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வதாகவும் கர்நாடக நீதிமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானிக்கு பதிலாக நாரிமன் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியான பாலி எஸ் நாரிமன், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கர்நாடக அரசுக்கு சார்பாக ஆஜரானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது, தமிழக அரசுக்கும், ஜெயலலிதா ஜெயராமிற்கும் எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா வழக்கில் அவர் ஆஜராகியுள்ளமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், ஜெயலலிதா ஜெயராம் பார்ப்பன அக்ரஹார சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்