ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆனந்தசங்கரி கடிதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆனந்தசங்கரி கடிதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆனந்தசங்கரி கடிதம்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 2:40 pm

ஜனாதிபதியின் வட பகுதிக்கான விஜயத்தின்போது ஆரம்பிக்கப்பட்ட பெறுமதிமிக்க திட்டங்களை வட பகுதி மக்கள் வரவேற்பார்கள் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இன்று அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கிற்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கு ஒரே ஜனாதிபதி என்பதையும், ஜனாதிபதி அனைவரையம் சமமாக நடத்துகின்றார் என்ற உணர்வு ஏற்படும் வரையும், தமிழ் மக்கள் தமது பாராட்டை மனமகிழ்த்து தரமாட்டார்கள் என வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், சம உரிமைகளோடும் அதிகாரங்களோடும் வாழ வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரதிநிதிகள் நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டும் என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பேரழிவுகளை கண்டும் தமிழீழ விடுதலை புலிகளே தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்று கூறுபர்களிடம் அத்தகைய உழைப்பை எதிர்ப்பார்க்க முடியாதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளிடம் அடகு வைத்த தங்க நகைகளை வட்டியும், முதலும் அறவிடாமல் உரிமையாளர்களிடம் கைளிக்கும் நடவடிக்கைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அத்தோடு புலிகளால் வற்புறுத்தி ஒவ்வொரு குடும்பங்களிடமும் இருந்து பெறப்பட்ட மூன்று பவுன் தங்கத்தையும் மக்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ,ஆனந்தசங்கரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிக வட்டிகளை அறவிட்டதன் மூலம் நியாயமற்ற முறையில் வங்கிகள் பெற்றுக்கொண்ட பணத்தையும் மக்களிடம் மீளக் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்