சர்தார் சிறப்பாக விளையாடுவதற்காக தாத்தாவின் மரணத்தை மறைத்த குடும்பத்தார்

சர்தார் சிறப்பாக விளையாடுவதற்காக தாத்தாவின் மரணத்தை மறைத்த குடும்பத்தார்

சர்தார் சிறப்பாக விளையாடுவதற்காக தாத்தாவின் மரணத்தை மறைத்த குடும்பத்தார்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 3:59 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப விழாவுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இந்திய ஹொக்கி அணியின் தலைவர் சர்தார் சிங்கின் தாத்தா மரணமடைந்தார்.

எனினும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக அவரது குடும்பத்தார் தாத்தாவின் மரணச் செய்தியை சர்தார் சிங்கை சென்றடையாமல் மறைத்துள்ளனர்.

பிரதமர் மோடி அளித்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சர்தார் சிங், இது குறிப்பிடுகையில், “தாத்தாவின் மரணச் செய்தி அறிந்தால் நான் வருத்தப்படுவேன். அதனால் எனது ஆட்டத்திறன் பாதிக்கப்படும் என்பதற்காகவே அவருடைய மரணத்தை எனது குடும்பத்தினர் எனக்கு தெரிவிக்கவில்லை. எனது குழந்தைப் பருவம் முதலே தாத்தாவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறேன்.

தொடக்க விழாவுக்கு முன்னதாக எனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் தேசிய கொடி ஏந்திச் செல்லவிருக்கிறேன். தொலைக்காட்சியில் பாருங்கள் என்று கூறினேன். அப்போதுகூட தாத்தா இறந்ததை என்னிடம் சொல்லவில்லை. இறுதிப் போட்டி முடிந்த பிறகுதான் தாத்தாவின் மரணம் பற்றி எனக்குத் தெரியவந்தது”. எனக் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்