ஒஸ்கார் பிஸ்டோரியஸின் குருதிப் பணத்தை பெற ரீவாவின் பெற்றோர் மறுப்பு

ஒஸ்கார் பிஸ்டோரியஸின் குருதிப் பணத்தை பெற ரீவாவின் பெற்றோர் மறுப்பு

ஒஸ்கார் பிஸ்டோரியஸின் குருதிப் பணத்தை பெற ரீவாவின் பெற்றோர் மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 12:52 pm

காதலியை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பரா ஒலிம்பிக் வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் குருதிப் பணம் வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

எனினும் இந்த தீர்மானத்திற்கு காதலியான ரீவாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்மால் இழைக்கப்பட்ட குற்றத்திற்காக 34,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஒஸ்கார் பிஸ்டோரியஸ் கூறியிருந்தார்.

கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் உயிரிழக்கும் வகையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த குற்றத்திற்காக அவருக்கு 15வருட சிறைத்தண்டனை வழங்குமாறு எதிர்தரப்பினர் வாதிடுகின்ற போதிலும் அவர் தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் சிறைத்தண்டனை வழங்கப்படகூடாது எனவும் வீட்டுக்காவலில் வைக்குமாறும் பிஸ்டோரியஸ் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்