ஐ படத்தின் வட அமெரிக்க உரிமையை வாங்குகிறதா ‘டிஸ்னி ஸ்டுடியோஸ்’?

ஐ படத்தின் வட அமெரிக்க உரிமையை வாங்குகிறதா ‘டிஸ்னி ஸ்டுடியோஸ்’?

ஐ படத்தின் வட அமெரிக்க உரிமையை வாங்குகிறதா ‘டிஸ்னி ஸ்டுடியோஸ்’?

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2014 | 11:14 am

இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம் குறித்து தினமும் ஒரு வித்தியாசமான செய்திகள் இணையத்தில் வெளிவந்து கொண்டே இருக்கின்றது.

தற்போது வந்துள்ள செய்தியின்படி ‘ஐ’ படத்தின் வட அமெரிக்க உரிமையை வாங்க உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் படத்தயாரிப்பு நிறுவனமான “டிஸ்னி ஸ்டுடியோஸ்” தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் தயாரிப்பாளரிடம் இருந்து அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பாளர் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை.

ஷங்கர்-விக்ரம்-ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்ற மும்மூர்த்திகள் சாதாரணமாக ஆரம்பித்த ‘ஐ’ திரைப்படம், ஆர்னல்ட் வரவிற்கு பின்பும், டீஸர் வெளியீட்டுக்கு பின்பும் உலக திரைப்படமாக மாறிவிட்டது.

ஊடகங்கள் ஹொலிவுட் படத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட இந்த படத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் டிஸ்னி ஸ்டுடியோஸ் இந்த படத்தின் உரிமையை பெற்றுவிட்டால் இது ஒரு ஹொலிவுட் படம்தான் என்பது நிரூபணம் ஆகிவிடும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்