பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் மீது தாக்குதல் (Video)

பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் மீது தாக்குதல் (Video)

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 4:55 pm

கொத்மலை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த பிரச்சினையே இதற்குக் காரணமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதியமைச்சருக்கும், மாகாண சபை உறுப்பினருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதையடுத்து, இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பொலிஸார் தலையிட்டு, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நிறுத்தி, மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்