பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா மயிர்கூச்செறியும் ​வெற்றி

பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா மயிர்கூச்செறியும் ​வெற்றி

பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா மயிர்கூச்செறியும் ​வெற்றி

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 9:55 am

பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி மயிர்கூச்செறியும் வெற்றியொன்றை பதிவுசெய்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 232 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரம்  பெற்று தோல்வி அடைந்திருந்தது.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு இறுதி ஒவரில் 2 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 2 ஓட்டங்களை மாத்திரமே பெற வேண்டிய நிலையில்  க்ளன் மெக்ஸ்வெல்லின் சிறப்பான பந்துவீச்சு மூலம் பாகிஸ்தான் அணியால் அந்த இலக்கை எட்டமுடியாமல் போயிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை அவுஸ்திரேலிய முழுமையாக வெற்றிகொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்