தெற்கு அதிவேக வீதி 2 மணித்தியாலங்கள் மூடப்படுகிறது

தெற்கு அதிவேக வீதி 2 மணித்தியாலங்கள் மூடப்படுகிறது

தெற்கு அதிவேக வீதி 2 மணித்தியாலங்கள் மூடப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2014 | 7:53 pm

தெற்கு அதிவேக வீதியின் களனிகம முதல் தொடங்கொட வரையான பகுதி இன்றிரவு 02 மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இலத்திரனியல் மின் சமிக்ஞை கட்டமைப்புக்கள் பொருத்தப்படவுள்ளதால், குறித்த பகுதி இன்றிரவு 11 மணிமுதல் நாளை அதிகாலை 1 மணிவரை மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இந்தக் காலப்பகுதியில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்